Monday, November 23, 2015

2 digit number divided by 9

mathworld

ரு இலக்க எண்ணை 9 ஆல் வகுக்க (Any two digit number divided by 9)

எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணையும் 9 ஆல் வகுக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி சுலபமாக விடை காண முடியும்.

வழிமுறை :

படி 1 :வகுபடும் எண்ணின் முதல் இலக்கமானது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் வகுபடும் எண்ணின் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வரும் விடையானது மீதி ஆகும்.

(குறிப்பு: மீதியானது 9 ஐ விட சிறியதாக இருந்தால் அதுதான் மீதி, மாறாக 9 க்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தால் அதிலிருந்து 9ஐ கழிக்க கிடைப்பது மீதியாகும் அவ்வாறே ஈவுடன் 1 ஐ கூட்ட வேண்டும்.)


உதாரணம் 1 : 51 / 9 = ?

வழிமுறை :

படி 1 :முதலில் வகுபடும் எண்ணான 51 எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள முதல் இலக்கமான 5 ஆனது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வேண்டும். எனவே 5+1=6, இதுதான் மீதி (Reminder) ஆகும்.
51 / 9 = ஈவு 5, மீதி 6


உதாரணம் 2 : 34 / 9 = ?

வழிமுறை :

படி 1 :முதலில் வகுபடும் எண்ணான 34 எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள முதல் இலக்கமான 3 ஆனது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வேண்டும். எனவே 3+4=7, இதுதான் மீதி (Reminder) ஆகும்.
34 / 9 = ஈவு 3, மீதி 7


உதாரணம் 3 : 29 / 9 = ?

வழிமுறை :

படி 1 :முதலில் வகுபடும் எண்ணான 29 எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள முதல் இலக்கமான 2 ஆனது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வேண்டும். எனவே 2+9=11,
இங்கு மீதியானது 11 வருகிறது எனவே இதிலிருந்து 9 னைக் கழிக்க வேண்டும். ஆக 11-9 = 2, இதுதான் மீதி. பின்னர் ஈவு 2 உடன் 1 ஐக் கூட்டி கொள்ள வேண்டியதுதான்.
29 / 9 = ஈவு 3, மீதி 2


உதாரணம் 4 : 96 / 9 = ?

வழிமுறை :

படி 1 :முதலில் வகுபடும் எண்ணான 96 எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள முதல் இலக்கமான 9 ஆனது ஈவு (Quotient) ஆகும்.
படி 2 :பின்னர் முதல் இலக்கத்துடன் இரண்டாவது இலக்கத்தைக் கூட்ட வேண்டும். எனவே 9+6=15,
இங்கு மீதியானது 15 வருகிறது எனவே இதிலிருந்து 9 னைக் கழிக்க வேண்டும். ஆக 15-9 = 6, இதுதான் மீதி. பின்னர் ஈவு 9 உடன் 1 ஐக் கூட்டி கொள்ள வேண்டியதுதான்.
96 / 9 = ஈவு 10, மீதி 6

No comments:

Post a Comment